பரிந்துரை பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளர்களுக்கான நடத்தை விதிகள்

நெறிமுறை மற்றும் நடத்தை விதிகளில் பின்பற்றப்பட வேண்டியவைகள்

1.0 நேர்மை

2.0 ஊழல்-எதிர்ப்பு / லஞ்ச எதிர்ப்பு

3.0. சட்ட தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை

4.0. ரகசிய வணிகத் தகவல் மற்றும் தரவைப் பாதுகாத்தல்

5.0. நியாயமான வணிக நடத்தை

6.0 சூழல் பாதுகாப்பு ( UNGC 7 முதல் 9 வரை)

7.0 நியாயமானஉழைப்பு (UNGC 1 முதல் 6 வரைமற்றும் SDG 8)

8.0 துன்புறுத்தல் தடுப்பு (பாலியல் துன்புறுத்தல் உட்பட) (UNGC 2 மற்றும் SDG 5)

9.0. தொழில்முறை

10.0 சின்னம் பயன்பாடு மற்றும் சித்தரிப்பு

11.0 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுதல்

1.0 நேர்மை

நேர்மை

1.1 செய்ய வேண்டியவை :

1.1.1 RP & A தங்கள் வேலையை நேர்மை, விடாமுயற்சி மற்றும் பொறுப்புடன் செய்ய வேண்டும், மேலும் ZED திட்டத் தேவைகளிலிருந்து விலகிச் செல்லக்கூடாது. 

1.1.2 MSME க்கு ZED சான்றிதழை பதிவு செய்ய, சமர்ப்பிக்க மற்றும் பதிவேற்ற ஆதரவளிக்கும் போது RP&A உண்மையான தரவு / தகவல் / ஆதாரங்களை வழங்கவேண்டும். (ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவை).

1.1.3. MSME-யிடம் தர மேலாண்மை மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு தொடர்பான பயிற்சி பதிவுகள் உள்ளதா என்பதை RP&A சரிபார்க்கவேண்டும்.

a) பதிவுகள் இருந்தால், பதிவேற்றுவதற்கு அதே பதிவுகளைப்  பயன்படுத்தவும்.

b) பதிவுகள் கிடைக்கவில்லை என்றால், MSMEகளுக்கு அவர்களின் பயிற்சி அணுகுமுறையில் வழிகாட்டவும். (including topics relevant to persons, frequency, trainer skills, etc.).

1.1.4. RP&A, MSME களின் PPE Availability மற்றும் பயன்பாட்டை சரிபார்க்க வேண்டும்

a) MSME-களால் பயன்படுத்தப்படாத பொருத்தமான PPE கள் கிடைத்தால், PPE பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சியை அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்குமாறு MSME-ஐ நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

b) பொருத்தமான PPE கள் கிடைக்கவில்லை என்றால், செயல்முறை / தயாரிப்புகளின் பின்னணியில் அவற்றை வாங்குவதற்கு MSME க்கு வழிகாட்டவும்/உதவவும் வேண்டும்

1.2: செய்யக்கூடாதவை

1.2.1 ZED தொடர்பான நடவடிக்கைகளில் MSME ஐ மேற்கொள்ளும்போது அல்லது வழிநடத்தும்போது RP&A எந்தவொரு முறைகேடு / நெறிமுறையற்ற நடைமுறையையும் மேற்கொள்ளக்கூடாது

உதாரணமாக:

a. RP&A MSME யின் நிறுவனத்திற்கு செல்லும் பொது தீ அணைக்கும் கருவி மற்றும் PPE (Personal Protective Equipment) எடுத்து செல்ல கூடாது..

b. Parameter தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமற்ற  PPE ஐ ஒரு ஆதாரமாகப் பயன்படுத்தும் MSME unit -களை RP&A ஊக்குவிக்ககூடாது /அனுமதிக்ககூடாது

c. RP&A, ZED Parameter தேவையை பூர்த்தி செய்ய தவறான பதிவுகள் (பயிற்சி பதிவுகள், விநியோக பதிவுகள்) மற்றும்/அல்லது ஆவணங்களை பதிவேற்ற MSME unit-களை வழங்க அல்லது அனுமதிக்ககூடாது.

d. RP&A பல MSME unit-களில் ஒரே தீயணைப்பு கருவி/அதே PPEகள்/அதே பதிவுகளை (பாதுகாப்பு பயிற்சி, தர மேலாண்மை பயிற்சி, விநியோக பதிவுகள்) பயன்படுத்க்ககூடாது.

1.2.2 RP & A (குறிப்பாக அவர்கள் முன்னிலையில்) MSME unit மற்ற unit-களிலிருந்து தீயணைப்பு கருவிகளை எடுத்து Parameter தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

RP&A இந்த விஷயத்தில் MSME unit-ஐ Influence செய்ய முடியாவிட்டால், அந்த ZED order யை RSJ- விற்கு பரிந்துரைக்க வேண்டாம்.

1.2.3 பாதுகாப்பு சுவரொட்டி(Safety Posters), தீ அணைக்கும் கருவி( Fire extinguishers) , கழிப்பறைகள் (Toilets) , தயாரிப்பு படம் (Product image),  வேலை பகுதி( Work area), மூலப்பொருள் சேமிப்பு ( Raw materials) , முடிக்கப்பட்ட பொருட்கள் சேமிப்பு ( Storage area) , டிஜிட்டல் திரை (e.g.,Laptop /Mobile /computer  திரை) ஆகியவற்றிலிருந்து தொடர்புடைய படத்திற்கு மாற்றாக வேறு எதையும் RP & A பயன்படுத்தக்கூடாது.

1.2.4 பாதுகாப்பு சுவரொட்டி(Safety Posters), தீ அணைக்கும் கருவி( Fire extinguishers) , கழிப்பறைகள் (Toilets) , தயாரிப்பு படம் (Product image),  வேலை பகுதி( Work area), மூலப்பொருள் சேமிப்பு ( Raw materials) , முடிக்கப்பட்ட பொருட்கள் சேமிப்பு ( Storage area) , டிஜிட்டல் திரை (e.g.,Laptop /Mobile /computer  திரை) ஆகியவற்றிலிருந்து தொடர்புடைய படத்திற்கு மாற்றாக வேறு எதையும் RP & A பயன்படுத்தக்கூடாது.

1.2.5 RP&A, MSME- களை ZED சான்றிதழுக்கு விண்ணப்பிக்க கூறி எந்த ஒரு அச்சுறுத்தலையும் அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது.

1.2.6பரிந்துரைக்கப்பட்ட ZED MSME ID களை RSJ உடன் பகிரும் போது RP & A பின்வருவனவற்றைச் செய்யகூடாது.

a) செல்லுபடியாகாத ZED ID–களை தவறாக குறிப்பிடுவது

b)இறுதியாக சமர்ப்பிப்பதற்கு முன் ZED MSME மொபைல் பயன்பாட்டின் மூலம் ஆவணங்களைப் பகிர்வது.

c) ஏற்கனவே மற்றொரு நிறுவனத்தால் பெறப்பட்ட ZED ID-களை பகிர்வது.

d) ஒரே ZED MSME ID களை ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் (மதிப்பீட்டு நிறுவனம் / ZED  அமைப்பு கூட்டாளர்கள் / QCI உட்பட ) பகிர்வது.

e) ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட அல்லது NC-இல்  உள்ள ZED MSME ID- களை பகிர்வது.

மேற்கூறிய நடவடிக்கைகள் செயலற்ற தன்மையை உருவாக்குகின்றன, தேவையற்ற தகவல்தொடர்புகளை அதிகரிக்கின்றன, மேலும் அனைவரின் நற்பெயரையும் கேள்வி குறி ஆக்குகின்றன. 

1.2.7 ZED திட்டம் தொடர்பாக MSME-களிடம் இருந்து RSJ எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காது. ZED திட்டம் தொடர்பாக RSJ/QCI/MOMSME/DIC/DFO சார்பாக MSME-களிடம் இருந்து எந்தவொரு வடிவத்திலும் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கவோ RP & A-களுக்கு  அதிகாரம் இல்லை.

2.0 ஊழல்தடுப்பு/லஞ்சஒழிப்பு

ஊழல்தடுப்பு/லஞ்சஒழிப்பு

2.1: செய்ய வேண்டியவை:

2.1.1 RP&A நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.

2.2: செய்யக்கூடாதவை:

2.2.1. RP&A ஒருபோதும், நேரடியாகவோ / இடைத்தரகர்கள் மூலமாகவோ, MSME- களிடமிருந்து ஒரு வணிகம் /  பிற நன்மைகளைப் பெறவோ முறையற்ற நிதி /  பிற நன்மைகளை வழங்கவோ உத்தரவாதம் அளிக்கவோ கூடாது.

2.2.2 MSME – யின் ZED திட்ட சான்றிதழுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் பரிசுகள், பொருட்கள், சேவை, லஞ்சம், சலுகைகள், பொழுதுபோக்கு, பொருட்கள், டிக்கெட்டுகள், பரிசு வவுச்சர்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது தள்ளுபடிகள் இவற்றை எதையும் RP&A ஏற்கக்கூடாது.

RP&A, பணம், பரிசு உட்பட எந்தவொரு வடிவத்திலும் லஞ்சம் அல்லது கமிஷனை வழங்கக்கூடாது,

அ) எந்தவொரு அதிகாரியும் (DIC/ DFO /MSME சங்கத்தின் பிரதிநிதி உட்பட) ZED விளம்பரம் தொடர்பான தேவையற்ற சலுகைகளைப் பெறவேண்டும் என்பதற்காக, ZED order  பெறக்கூடாது,

ஆ) RP & A MSME – இடம் இருந்த எந்த ஒரு சலுகையும் / லஞ்சமும் வாங்க கூடாது.

சட்டத் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை

3.1:செய்ய வேண்டியவை:

3.1.1. ஊழல் தடுப்பு / லஞ்சம் உள்ளிட்ட உள்ளூர் விதிமுறைகள் /  சட்டங்களுக்கு இணங்க RSJ முழுமையாக உறுதிகொண்டுள்ளது. RP & A இதைப் பின்பற்றும் என்று RSJ-வால் எதிர்பார்க்கப்படுகிறது

பொருந்தக்கூடிய சட்டங்கள் / நிறுவனக் கொள்கைகளின்படி அனைத்து வேலைகளும் RP&A ஆல் செய்யப்பட வேண்டும் என்று RSJ எதிர்பார்க்கிறது

மோசடி செய்வது இந்திய சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். RSJ அதை பொறுத்துக் கொள்ளாது. இது RSJ-வின் செல்வாக்கு மண்டலத்திலும், விநியோகச் சங்கிலியிலும் காணப்பட்டால் அதை ஒழிக்க RSJ உறுதிகொண்டுள்ளது.

3.1.2. பொருத்தமான இடங்களில், இந்த சட்டங்களுக்கு எதிரான சந்தேகத்திற்கிடமான அல்லது உண்மையான குற்றங்களில் RSJ சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும், அதே நேரத்தில் RSJ, RP&A- விடமிருந்து அதே ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.

3.2: : செய்யக்கூடாதவை:

3.2.1. RP & A எந்தவொரு நெறிமுறை, சட்ட சூழல் /  சுகாதாரம் / பாதுகாப்பு அல்லது திட்டத் தேவைகளை மீறக்கூடாது.

4.0. ரகசிய வணிகத் தகவல் மற்றும் தரவைப் பாதுகாத்தல்

ரகசிய வணிகத் தகவல் மற்றும் தரவைப் பாதுகாத்தல்

4.1: செய்ய வேண்டியவை:

4.1.1. RP&A, தன்னுடைய சேவைகளை தொடரும் பொழுது பெறப்படும் அனைத்து தகவல்களையும் வணிக ரீதியாக நம்பகமானதாகக் கருதும், அத்தகைய தகவல் ஏற்கனவே MSME – யி யால் வெளியிடப்பட்டிருந்தால் மட்டும் அத்தகைய தகவல் பொது களத்தில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

4.1.2. IPR, வாடிக்கையாளர் தகவல்/விநியோக சங்கிலி தகவல்/உற்பத்தி செயல்முறை உள்ளிட்ட MSME மற்றும் அவற்றின் உற்பத்தி நிறுவனத்தின்  தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு RP & A க்கு உள்ளது.

4.2: செய்யக்கூடாதவை:

4.2.1. ஒரு MSME யின் ரகசிய தகவல்களை மற்றொரு MSME க்கு வெளிப்படுத்தக்கூடாது.

4.2.2. போட்டித்திறன் மற்றும் நற்பெயரை எந்த வகையிலும் பாதிக்கக்கூடிய MSME  தகவல்களை மற்றவர்களுடன், RP & A வெளியிடவோ/விவாதிக்கவோக்கூடாது.

4.2.3.MSME -களிடமிருந்து எந்தவொரு ரகசிய தரவையும் தகவலையும் RP & A எடுக்கவோ, செயல்படுத்தவோ கூடாது.

ZED தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக MSME-களிடமிருந்து சேகரிக்கப்பட்ட எந்தவொரு தரவு அல்லது தகவலும் செயல்பாடு முடிந்த பிறகு பொறுப்புடன் அகற்றப்பட வேண்டும்.

4.2.4. RP&A, MSME நிறுவனத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. RP&A, MSME – யின் சம்மதம் இல்லாமல் தகவல்களை பகிரக்கூடாது.

5.0 நியாயமான வணிக நடத்தை

நியாயமான வணிக நடத்தை

5.1: செய்ய வேண்டியவை:

5.1.1. RSJ சுதந்திரமான போட்டியை நம்புகிறது. நேர்மையான மற்றும் நியாயமான வணிக நடைமுறைகள் மூலம் எங்கள் போட்டியாளர்களுடன் இணைத்து நாங்கள் முயற்சிக்கிறோம்  நிர்வாகம், அனைத்து ஊழியர்கள் / கூட்டாளிகள் உண்மையான உரிமைகோரல்களை மட்டுமே செய்ய உறுதிப்படுத்தியுள்ளனர். RP & A நியாயமான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி ZED திட்டத்தை ஊக்கவைக்கும்

5.2: செய்யக்கூடாதவை:

5.2.1. RP & A சுதந்திர சந்தையின் உணர்வுக்கு எதிரான நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடவோ அல்லது ஊக்குவிக்கவோ/பின்பற்றவோ கூடாது.

e.g. தொழிலைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக MSME unit-கள் அல்லது அவற்றின் ஊழியர்களுக்கு நேரடி அல்லது மறைமுக ஊக்கத்தொகை லஞ்சம் போன்றவை வழங்கக்கூடாது

5.2.2. RSJ மற்றும் அவர்களின் போட்டியாளர்கள் (பிற ZED மதிப்பீட்டு நிறுவனம்/அமைப்பாளர்கள்) / அவர்களின் சேவைகளுக்கான ஒப்பீடுகள்/குறிப்புகள் உட்பட பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் நெறிமுறையற்ற முறையில் ZED திட்டம் அல்லது RSJ ஐ RP & A சந்தைப்படுத்தவோ அல்லது ஊக்குவிக்கவோ கூடாது.

6.0 சுற்றுச்சூழல் பாதுகாப்பு ( UNGC 7 to 9)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ( UNGC 7 to 9)

6.1:செய்ய வேண்டியவை :

6.1.1.ZED திட்டம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளும்போது RP & A மற்றும் JLL ஆகியவை சுற்றுச்சூழலுக்கு ஆதரவும்  / சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் செய்யவேண்டும்

6.1.2. RP & A, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களை பின்பற்ற MSME-களை ஊக்குவிக்கவேண்டும்.

6.2: செய்யக்கூடாதவை:

6.2.1. ZED பணிகளைச் செய்யும்பொழுது சுற்றுசூழல் தொடர்பான விதிமுறைகள் மீறப்படுவதை RP&A உறுதி செய்யாமல் இருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படாது.

7.0 நியாயமானஉழைப்பு (UNGC 1 முதல் 6 வரைமற்றும் SDG 8)

நியாயமானஉழைப்பு (UNGC 1 முதல் 6 வரைமற்றும் SDG 8)

7.1: செய்ய வேண்டியவை:

7.1.1 நியாயமான தொழிலாளர் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் RSJ  உறுதிக்கொண்டுள்ளது:

கட்டாய/கொத்தடிமை உழைப்பு/சிறைவாசம்/குழந்தைத் தொழிலாளர் மற்றும் நவீன அடிமைத்தனத்தைத் தடை செய்தல்.

ஒப்பந்த பங்குதாரர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஊதியம் எப்போதும் பொருந்தவும், குறைந்தபட்ச ஊதியத்தின் சட்டங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வரம்புகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது.

கூட்டாளிகள்  தங்கள்உடைய வேலையை சுதந்திரமாக தேர்தெடுத்து கொல்லாலம்.

அனைத்து கூட்டாளிகளும் தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு பணி விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கதெளிவு படுத்த வேண்டும் -எந்தவொரு கட்டாய உழைப்பையும் ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொறுத்துக்கொள்ள முடியாது.

கூட்டாளர்களுக்கு அவர்களின் தொழில்களில் தொழில்முறை/நெறிமுறை வளர்ச்சியைத் தொடர ஒரு வாய்ப்பு வழங்குகிறது.

RP& A எந்த ஒரு கேள்வியை எழுப்பினாலோ அல்லது அவர்களுடைய கருத்தை பகிர்தலோ அதை ரகசியமாக ஆக பாத்து கொள்வோம்

எங்கள் பரிந்துரை பங்குதாரர் தங்கள் பணியிடத்தில் மேற்கூறிய நியாயமான தொழிலாளர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று RsJ எதிர்பார்க்கிறது.

7.1.2 RP&A, குழந்தைத் தொழிலாளர், கட்டாய/பிணைக்கப்பட்ட தொழிலாளர் அல்லது வாடிக்கையாளர்/இடைத்தரகர்கள்/கூட்டு நிறுவன பங்குதாரர்/உரிமையாளர்கள்/ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இது போன்ற பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவது குறித்து அறிந்திருந்தால், சட்ட மீறல் RSJ- க்கு தெரிவிக்கப்பட்டு அடுத்த நடவடிக்கைக்கு விவாதிக்கப்பட வேண்டும்.

7.2 செய்யக்கூடாதவை:

7.2.1 பிரிவு #7.1.1/7.1.2 இன் படி ஏதேனும் மீறல் கண்டறியப்பட்டால் RPP தொடர்பான எந்தவொரு வணிகத்தையும் நடத்த முடியாது.

7.2.2 பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவது தொடர்பான விசாரணையில் RP & A நேரடியாக ஈடுபடாது.

8.0 துன்புறுத்தல் தடுப்பு (பாலியல் துன்புறுத்தல் உட்பட) (UNGC 2 மற்றும் SDG 5)

துன்புறுத்தல் தடுப்பு (பாலியல் துன்புறுத்தல் உட்பட) (UNGC 2 மற்றும் SDG 5)

8.1. செய்ய வேண்டியவை:

8.1.1. எந்தவொரு அடிப்படையிலும் பாகுபாடு காட்டாமல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பான சூழலை வழங்க RSJ உறுதிகொண்டுள்ளது. RSJ அவர்களுடன் RP&A- ஆக பணிபுரியும் அனைவரையும் மதிக்க வேண்டும், மேலும் எந்தவொரு வடிவத்திலும் இழிவுபடுத்துதல், கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ளாது.

8.1.2. RSJ இன் RP & A இல் பணிபுரியும் அனைவரையும் மதிக்கிறது மற்றும் எந்த வடிவத்திலும் இழிவுபடுத்துதல், கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ளாது. பாதிக்கப்பட்ட பரிந்துரை கூட்டாளர்கள் தங்கள் புகாரை RSJ- விற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் எந்தவொரு பரிந்துரை கூட்டாளியாலும் துன்புறுத்தல் தொடர்பான ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால், அதை RSJ – விற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.

8.2: செய்யக்கூடாதவை;

8.2.1. RP & A கவனத்திற்கு: நீங்கள் வேலை செய்யும் இடங்களில் ஏதேனும் பாலில் துன்புறுத்தல் (Sexual Harassment/ Physical touch) ஏற்பட்டால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.2.2. RP&A, MSME ஊழியர்களுடனோ அல்லது அவர்களின் கூட்டாளிகளுடனோ தொடர்பு கொள்ளும்போது,பாலியல் அல்லது பிற துன்புறுத்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்று கருதப்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

அதாவது தாக்குதல் அல்லது உருவ கேலி செய்தல் அல்லது அவமானங்களை உருவாக்குதல், காட்சிப்படுத்துதல், மின்னஞ்சல் அனுப்புதல், குறுஞ்செய்தி அனுப்புதல் அல்லது விநியோகித்தல், தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துதல், விரோதமான அல்லது அச்சுறுத்தும் சூழலை உருவாக்குதல், தனிமைப்படுத்துதல், அல்லது கூட வேலை செய்பவரிடம் ஒத்துழைக்காதது, அல்லது தீங்கிழைக்கும் அல்லது அவமானகரமான வதந்திகளைப் பரப்புதல் என்று கருதப்படும் எந்தவொரு நேரடி அல்லது மறைமுக நடத்தையிலும் ஈடுபடக்கூடாது.

9.0 தொழில்முறை

தொழில்முறை

9.1. செய்ய வேண்டியவை

9.1.1 RP&A தொளித்துவமாக செயல் படும் . RP&A அவர்களின் ஆடைக் குறியீடு மற்றும் நடத்தையில் மட்டுமல்லாமல், MSME- களைக் கையாள்வதிலும் பிரதிநிதித்துவப் படுத்துவதிலும் தொழில்முறையானதாக இருக்க வேண்டும் என்று RSJ  எதிர்பார்க்கிறது.

9.1.2 RP&A சரியாக ஆடை அணிந்திருக்க வேண்டும். ஆடைகள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சரியான காலணிகளுடன் சாதாரண ஆடைகளை அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

9.1.3 RP&A நகங்களை சுத்தம் செய்து அவற்றை தவறாமல் வெட்ட வேண்டும். ஆண்களின் தாடி Clean shave அல்லது நேர்த்தியாக வெட்டப்பட்டிருக்கவேண்டும்.

9.1.4 RP & A Site-ல் இருக்கும்போது MSME இன் நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.ஒருவர் MSME பணியிடங்களுக்குச் செல்லும்போது RP / ARP’s வழங்கிய அடையாள அட்டையை  அணிய வேண்டும்.

9.2. செய்யக்கூடாதவை

9.2.1 RP & A எந்த ஒரு இழப்பீடு மற்றும் லஞ்சம் பெற கூடாது .RP & A எந்தவொரு கட்டாய அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சலுகைகளைப் பெறக்கூடாது..

9.2.2 கட்டுப்படுத்தப்பட்ட பொருள் நுகர்வு e.g. Alcohol  அல்லது போதைப்பொருள் போன்றவற்றின் போன்றவற்றை உள்கொண்டிருக்கும் பொழுது RP&A MSME unit-களுக்குச் செல்லவோ அல்லது MSME-களுடன் தொடர்பு கொள்ளவோ கூடாது.

9.2.3 MSME- களின் பணியிடத்தில் அல்லது MSME- களை கையாளும்/பிரதிநிதித்துவப்படுத்தும் போது RP&A ஆட்சியப்பனைக்குரிய மொழியைப் பயன்படுத்தக்கூடாது. அவதூறான மொழியில் பாலியல் ரீதியான வெளிப்படையான கருத்துக்கள், முன்னோடிகள், கலாச்சார அவமதிப்புகள் மற்றும் அரசியல் கருத்துக்கள் ஆகியவை இதில் அடங்கும்,

9.2.4. MSME வளாகங்களிலும், MSME களைக் கையாளும் போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் போதும் புகையிலை புகைக்கப்படக்கூடாது/மெல்லப்படக்கூடாது.

9.2.5. RP & A அரசியல் கட்சி இணைப்புகளுடன் கூடிய ஆடைகளையோ அல்லது அவதூறான கோஷங்களுடன் கூடிய ஆடைகளையோ அணியக்கூடாது.

RP & A மிகவும் வளறிய /கிழிந்த ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும், இது தொழில்முறையற்றதாகக் கருதப்படலாம்.

நீண்ட கூந்தல் கொண்ட RP & A தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக பணியிடப் பகுதிக்குச் செல்லும்போது திறந்த/தளர்வான முடியைத் தவிர்க்க வேண்டும்.

9.2.6  RP& A மதம் அல்லது அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு MSME இடமும் காசுக்காக அணுக கூடாது.

9.2.7 MSME மற்றும் அந்நிறுவனத்தின் மக்களுடன் எந்தவொரு நேரடி அல்லது மறைமுக நடத்தையிலும் RP & A ஈடுபடாது, இது புண்படுத்தும், அச்சுறுத்தும், தீங்கிழைக்கும் அல்லது அவமானகரமானதாக இருக்கும்.

இனம், வயது, தன்மை, பாலினம், நிறம், மதம், பிறந்த நாடு , , திருமண நிலை, சார்புடையவர்கள், இயலாமை, சமூக வர்க்கம் அல்லது அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட எந்தவொரு பாலியல் / பிற துன்புறுத்தல்  இதில் அடங்கும்.

10.0 சின்னம் பயன்பாடு மற்றும் பிரதிநிதித்துவம்

சின்னம் பயன்பாடு மற்றும் பிரதிநிதித்துவம்

10.1 MSME/ சங்கம் உட்பட, RP&A யாரிடமும் தங்களை தவறாக சித்தரிக்கக்கூடாது.

MSME அமைச்சரகம், இந்திய அரசு அல்லது மாவட்ட தொழில் துறை மையம்  ( DIC) அல்லது மாநில அரசு அல்லது RSJ அல்லது QCI-ஐ தவறாக சித்தரிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

10.2 RP&A தங்கள் அடையாள அட்டை/  வருகை அட்டை / சமூக வலைதளம்/   சிற்றேடுகள் அல்லது பரிந்துரை கடிதம்/ வாகனம்/அதிகாரம் சம்பந்தப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறும்வரை MSME அமைச்சரகம் / இந்திய அரசு / மாநில அரசு / RSJ  / ZED/ QCI-யின் சின்னம் போன்றவற்றை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது

10.3 QCI இன் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் QCI இன் பெயர், சின்னம், சேவைக் குறியீடுகள் அல்லது வேறு எந்த ஆவணத்தையும் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த RP & A அனுமதி இல்லை.

10.4.RSJ Inspection Service Limited நிறுவனத்திடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெறாமல் RSJ  இன் வர்த்தக முத்திரையான RSJ என்ற பெயரைப் பயன்படுத்தி எந்த செய்தி வெளியீடுகளையும் வெளியிடவோ அல்லது பிற வலைத்தளங்களிலோ வெளியிட கூடாது.

11.0 பரிந்துரைகளைஎழுப்புவதற்குதொடர்புகொள்ளவேண்டியவர்கள்

பரிந்துரைகளைஎழுப்புவதற்குதொடர்புகொள்ளவேண்டியவர்கள்

RP & A / கூட்டாளர்கள் / வணிக கூட்டாளர்கள் யாராவது விதிமுறைகளை மீறுவதை நீங்கள் கவனித்தால் /  விதிமுறைகளை பின்தொடரவில்லை / தெளிவாக இல்லை /  ஏதேனும் கவலைகள் உள்ளன என்றால், தயவுசெய்து RSJ பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும் அxல்லது மின்னஞ்சல் /  தொலைபேசி அழைப்பு / செய்தி மூலம் உடன்பாடு  அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். வழங்கப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள்  உங்களது பெயர்  வெளியே தெரிய வேண்டாம்  என்று இருக்க முடிவு செய்தால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பெயர்  மற்றும்  தகவல்கள் வெளியிடப்படாது. இந்த வழக்கு உரிய மரியாதையுடன் கையாளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

குறைதீர்க்கும்வழிமுறையைப்பயன்படுத்துங்கள்: விரிவான புகார்கள் மற்றும் மேல்முறையீட்டு செயல்முறையைக் கொண்ட கீழேயுள்ள வலை இணைப்பைப் பார்க்கவும். . http://www.rsjqa.com/social-responsibilities/complaints-appeals

தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம், 

Integrity related issues Feedback / compliant against all the  above code 
Mr. Sudarshan Mane -Sr. Integrity Manager, Lissa Arcade Building, L-1 49/A, 4th Floor, 5th Main,6th sector, HSR Layout, Banglore-560068, Karnataka, India.
 Tel: + 91 8850 249 682  
 Email: [email protected]     
 Mr. Yuvraj Jambhale- Compliance Officer, GB- 25, Highstreet corporate centre, Kapurbhavdi, Thane (West) -400607 Maharashtra, India.
Mobile: +91-9819 621 121 
Email: [email protected]